Month: June 2022

நாளை முதல் பகல் மற்றும் இரவில் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW போன்ற வலயங்களில் 3 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வலயங்களில் பகல்…

மறு அறிவித்தல் வரை அரச உத்தியோகத்தர்களுக்கான உத்தரவு தொடரும் – பொது நிர்வாக அமைச்சு

அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நீடித்து பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பாடுகளைத் தொடருமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உத்தியோகத்தர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க அனுமதிக்குமாறும், அவர்களின் சேவைகளை…

வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் உதவியுடன் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார். இதன்போது கைத்தொலைபேசி…

நாளை (27) முதல் பேருந்து கட்டணமும் அதிகரிப்பு !! புதிய விலை விபரம் இதோ

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு…

எரிபொருள் விலை அதிகரிபின் எதிரொலி: அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (26) முதல் சிறிய உணவுகள், கொத்து மற்றும் மதிய உணவுப் பொட்டலங்கள் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும்…

அரச நிறுவனத்திற்கு ஊழியர்களையோ அதிகாரிகளையோ நான் நியமிக்கவில்லை – நாமல்

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத்…

அடுத்த மாதமே சந்தைக்கு எரிவாயு: சிலிண்டர்கள் விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு பின்னர் 120,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள 80,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு நாளைக்கு…

அதிரடியாக அதிகரித்தது எரிபொருள் விலை : புதிய விலை 550 ரூபாய் !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 470 ரூபாயாக…

காலை 7:30 மணி முதல் கல்வி நடவடிக்கை : கடந்தவாரம் மூடப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படும்

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலை கல்வி…

எரிந்த வீட்டிற்கு பதிலாக புதிய வீடு கட்ட நிறுவனங்களிடம் பணம் திரட்டும் அமைச்சர் !!

மே 09 அன்று கலவரத்தால் சேதமடைந்த வீட்டை மீளக் கட்டியெழுப்ப அமைச்சர் ஒருவர், நிறுவனங்களிடம் பணம் திரட்டி வருவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சொந்தமான அமைச்சின் விநியோக நிறுவனங்களிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணம்…

இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் : முழு விபரம் இதோ

இன்று (25) இரண்டரை மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஆசிய திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் ஆகியோரும் விஜயம்…

உக்ரைன்-ரஷ்யா மோதலுக்கு சர்வதேச நாணய நிதியம் பங்களித்தது: வாசுதேவ குற்றச்சாட்டு

அமெரிக்காவின் கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு சர்வதேச நாணய நிதியமும் பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.…

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றார் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க…

பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒருவாரம் இலங்கையில் தங்கியிருந்த குறித்த பிரதிநிதிகள் குழு, ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு கொள்கைப் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்தது. பிரதமர், நிதியமைச்சு, இலங்கை…

அடுத்த வாரம் பாடசாலைகள் திறக்கப்படுமா ?

அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இவ்வர்று முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (25) எடுக்கப்படவுள்ளது. நிலைமைகளை மீளாய்வு செய்து அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பு மற்றும் மேல்…

பெருமளவிலான பணத்தை தொடர்ந்து மோசடி செய்கின்றது அரசாங்கம் : எதிர்க்கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு

மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து இந்த வார நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும்…

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் அறிவிப்பு !!

நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) 2இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி 30 நிமிடங்கள் மின்சாரம்…

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலிய பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்பு கடுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு வருபவர்களில்…

ஜனாதிபதி செயலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: சிலர் கைது

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை…

5 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பிரதமர் ரணில் பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் இன்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு நிதி உதவியை வழங்கும் வகையில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட குறித்த குழு இலங்கை வந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார…

எரிபொருள் பிரச்சினை : O/L விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகல் !

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினா தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பரீட்சைகள் ஆணையாளர்…

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் இந்த நட்டத்தை இலங்கை மின்சார சபையால் தாங்க முடியாது என…

கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு சந்தை தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய அதிகம் அதிகாலை முதல் பெட்ரோலுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிமான நீண்ட வரிசையில் மக்கள்…

அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

இறுதியாக நாளை அமைச்சரவைக்கு வருகின்றது 21 ஆவது திருத்தம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் இணக்கப்பாட்டுக்கு பின்னர், அமைச்சரவை அங்கீகாரத்திற்காக நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மற்றும் சிரேஷ்ட…

பொருளாதார நெருக்கடி: இலங்கையின் கடனைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த சீனா தயார்

இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது. அதன் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது என தெரிவிக்கப்படுகின்றது.…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கத்தின் திடீர் முடிவு

தொழில்சார்ந்த போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள், பாடசாலை வாகனங்கள், அலுவலக ஊழியர்கள் செல்லும் வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த…

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் நேற்று அமைதியின்மை: இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம்

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இராணுவத்தினருக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இராணுவ சோதனைச் சாவடியில்…

கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அடுத்த வாரம் விடுமுறை

கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரில் உள்ள அரச மற்றும் அரசு அங்கிகாரம் கொண்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர்…