Month: May 2022

அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 நாள்: நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவை பெற்றது பொலிஸ்

கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (28) 50 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இளைஞர்கள் குழுவொன்று போராட்டத்தை ஆரம்பித்தது. இந்நிலையில் குறித்த போராட்டம் தொடங்கி இன்று…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடமபெற்றுள்ளதாக அறியவிக்கப்பட்டுள்ளது. இதில் 31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக…

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த தென் மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு குற்றவியல் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு…

கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை : தவிக்கும் பெற்றோர்

அட்டலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போன சிறுமி (மொஹமட் அக்ரம் பாத்திமா ஆயிஷா) தொடர்பில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று காலை வீட்டிற்கு…

ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ?

அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள்.…

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை: அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் கூடுவதற்கு முடிவு!

கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் இறுதிக் கூட்டத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) நடாத்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 21ஆவது திருத்தச் சட்டமூலம்…

விந்தணு குறைபாடு? இந்த பழக்கங்கள் காரணமாக இருக்கலாம் ஆண்களே ஜாக்கிரதை

அன்றாடம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் சில நம்மை அவ்வப்போது சிக்கலில் ஆழ்த்தக்கூடும். குறிப்பாக, ஆண்களின் சில கெட்ட பழக்கங்கள் அவர்களின் விந்தணு எண்ணிக்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதில் அதிகப்படியான மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் சில தவறான தினசரி…

இன்றைய (28) நாணய மாற்று விகிதம் : டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களை அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர்கொள்விலை – ரூ. 354.27விற்பனை – ரூ. 364.22 ஸ்டெர்லிங் பவுண்ட்கொள்விலை – ரூ. 446.63விற்பனை – ரூ. 462.16 யூரோகொள்விலை – ரூ. 381.90விற்பனை –…

பங்களாதேஷுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனை தொடர்ந்து இலங்கை அணி 506 பெற்றதோடு பதிலுக்கு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிடது கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை 100,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அதனை செலுத்தாவிட்டால்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அறிக்கை ஒன்றை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம்…

பெண்கள் திருமணத்துக்கு பின் கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத விஷயங்கள் என்னென்ன…!

திருமணத்துக்கு முன்பு காதல் ஏதேனும் இருந்திருந்தால், அந்த காதலருடன் பிரிவு ஏற்பட்டிருந்தால் அது பற்றி கணவரிடம் சொல்லாமல் இருப்பது தான் நல்லது. திருமணமான புதிதில் இருவரும் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து ஆண்கள் தங்களுடைய பழைய காதலைப் பற்றி…

13,200 லீற்றர் பெட்ரோலுடன் சென்ற பௌசர் விபத்து !

குருநாகல் பகுதியில் 13,200 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற எரிபொருள் போக்குவரத்து பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக பௌசரில் இருந்த பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வீணாகியுள்ளது. கொலன்னாவையில் இருந்து திருகோணமலை, கிண்ணியா நோக்கி பயணித்த எரிபொருள் பவுசரே…

இரண்டு வாரங்களில் 104 பில்லியன் ரூபாயை அச்சிட்ட மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாயை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள…

20 நாட்களுக்கு போதுமான பெட்ரோல் இருக்கின்றது… டீசல் இல்லை…!

நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாகவும், அவை 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டீசல்…

பொதுமக்களுக்கு துக்கமான செய்தி: மாத இறுதிவரை காஸ் இல்லையாம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையே நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் கூறியுள்ளார். ஆகவே 30 ஆம் திகதி முதல்…

இன்று அவசரமாக ரணிலை சந்திக்கும் கட்சி தலைவர்கள்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் 21 ஆவது திருத்தம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அரசாங்கத்தில் சார்பற்ற அரசியல் கட்சிகளின்…

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் சபுகஸ்கந்த திறப்பு: ஆறு நாட்களில் எரிபொருள்

மார்ச் 20 ஆம் திகதிக்கு பின்னர் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் சரக்கு இறக்கப்படும் நிலையில், ஆறு நாட்களில் எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி…

அவசரமாக இன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட கூட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு சட்ட கட்டமைப்பில் தலையிடுவது…

சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 5 முதல் இந்த ராசிக்காரங்களுக்கு இன்னல்கள் !!! நீங்கள் எந்த ராசி?

பொதுவாக சனி வக்ர நிலை ஜாதகத்தில் பெரிய தாகத்தை ஏற்படுத்தும். சனியின் வக்ர பெயர்ச்சி சனி தசையால் பாதிக்கப்பட்டவர்களை மேலும் சிரமங்களை சந்திக்க நேரிடும். ஒன்பது கிரகங்களில் சனியின் இயக்கம் மட்டும் மிகவும் நிதானமாக இருக்கும். சனியின் ராசி மாற்றம் இரண்டரை…

21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (26) தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சுயாதீன நாடளுமன்ற…

பொருளாதார பிரச்சினைகளுக்கு பணம் அச்சிடுவது தீர்வாகாது – ரணிலை மறைமுகமாக சாடிய சஜித்

தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பணம் அச்சிடுவது தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு பணத்தை அச்சிடுவது தீர்வாகாது என்றும், நிலையான பொருளாதாரக்…

34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பங்களாதேஷ் அணி தடுமாற்றம்: நாளை வெற்றிபெறுமா இலங்கை அணி?

மிர்பூரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 141 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி நான்காம் நாள் ஆட்ட நேரமுடிவில் 4…

அதிகரிக்கின்றது வரி : 7ஆம் திகதி அதிரடி அறிவிப்பை வெளியிடுகின்றார் பிரதமர் ரணில்

தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நிலைமை தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வரவு செலவுத் திட்டத்தில்…

திவ்ய பாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

சதீஷ் செல்வகுமார் இயக்கிய ‘பேச்சிலர் ‘ படத்தில் G.V.பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்திருந்த திவ்ய பாரதி சமூக வலைத் தளங்களில் மிகவும் பிரபலமாக வளம் வருகின்றார். தொடர்ந்தும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துவரும் நடிகை திவ்யா பாரதி தற்போது அழகாக இருக்கும்…

‘இந்தியன் 2’ நடக்கும் : கமல்ஹாசன் தகவல்

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நின்றது. அதன்பின்…

அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

அரசாங்க ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை வரவு செலவுத் திட்ட உரையின்போது…

சமீபத்திய வன்முறைகள் குறித்து விசாரிக்க முன்னாள் தளபதிகள் : 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் வசந்த கரன்னகொடவே தலைவர்

வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வசந்த கரன்னகொட, ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 மற்றும் மே 09 ஆம் திகதிகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த…

சவேந்திர சில்வா அதிரடியாக நீக்கம் : புதிய இராணுவ தளபதி நியமனம்

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதிய இராணுவ தளபதியாக இராணுவப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும்…