Month: May 2022

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். இதனை எதிர்த்து ஹிருணிகா மற்றும் அவரது தாயாரால்…

ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதி மின்வெட்டு குறித்த அறிவிப்பு இதோ !

நாடளாவிய ரீதியில் ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே, பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம் !

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 1 முதல் அமுலாகும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் 24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல்…

விமலின் மனைவிக்கு பிணை…. வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவின் பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும்…

அமெரிக்காவில் இருந்து அனுப்பட்ட மருந்துகள் 12 நாட்களாக கட்டுநாயக்கவில் தேக்கம்…

அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை…

கட்டுநாயக்க வந்த மருந்து பொருட்களை விடுவிப்பதில் தாமதம்: இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தபாய ரணசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருதய சத்திரசிகிச்சைகளுக்கான…

ஜனாதிபதியின் கீழ் 42 அரச நிறுவனங்கள், பிரதமரின் கீழ் 57 நிறுவனங்கள் !

புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய ஸ்தாபனங்கள் உட்பட 42 அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 26 அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி,…

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சட்டங்களில் திருத்தம் – பிரதமர் ரணில் முன்மொழிவு !

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க சில சட்டங்களில் திருத்தம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். அதன்படி பின்வரும் சட்டங்களை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டம், 2002 ஆம்…

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் !

தமிழர்களின் அறிவுப் புதையல் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் அரசாங்க ஆதரவு சிங்களக் கும்பலால் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில்…

40,000 மெட்ரிக் தொன் டீசல் சரக்கு இலங்கை வந்தது…!

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் இந்த எரிபொருள் நாட்டை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு கிழமைக்கு பின்னர் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம் !

ஒரு கிழமைக்கு பின்னர் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (31) சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தினமும் 50,000 எரிவாயு சிலிண்டர்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த நேரத்தில் கப்பல் வராத…

சிறுமியின் முகத்தை சேற்றில் தள்ளி, அவரது முதுகில் முழங்களால் அழுத்திய கொடூரம் – சிறுமி படுகொலை குறித்து தகவல் வெளியானது

பண்டாரகம, அட்டுலுகமவில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொட்டு ரொட்டி தயாரிக்கும் நபர் ஒருவர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷாவின் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கொட்டு ரொட்டி தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி.…

9 ஆம் திகதி வன்முறை : பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் கைது !

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்ற நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

நாட்டுக்கு மக்களுக்கு இன்று விசேட அறிவிப்பை வெளியிடுகின்றார் பிரதமர் !

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அவரது உரையில் முக்கிய அம்சங்களாக அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம்: விசாரணைகள் சி.ஐ.டி.க்கு மாற்றம்

09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று 28 சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் அவரது…

யாழில் எரிவாயு சிலிண்டர் பெற்றுக்கொள்வதற்கு புதிய நடைமுறை !

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால் கிடைக்கப்பெறும்…

இன்று வானில் நடக்கவுள்ள அதிசயம் : வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் !

செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றே ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் இன்று ஞாயிற்றுக்கிழமை தோன்றவுள்ளது. இதனை மக்கள் வெற்று கண்ணில் பார்க்க முடியும் என யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தை…

முன்னாள் பிரதமர் மஹிந்தவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன,…

அரசியல் தலையீடுகள் இருக்காது : ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதி

மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதிச் சபையின் உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன…

இறுதி வடிவம் பெற்ற பின்னரே ஆதரவு குறித்து அறிவிப்போம்: 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சில குறைபாடுகள் என்கின்றார் சுமந்திரன்

19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு தமிழ்…

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் உயர் பதவிகளை வகிக்க தடை விதிக்க வேண்டும் – வாசுதேவ

இரட்டை குடியுரிமை உடைய நபர் அரசியலில் அல்லது அரச உயர்பதவி வகிப்பதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இரட்டை குடியுரிமையுடைய இருவர் இதுவரையில் அரசியல் மற்றும் அரச உயர் பதவியில் செல்வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.…

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பேன் என ஜனாதிபதி கோட்டா உறுதியளிப்பு!

ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விரைவாக நடவடிக்கை எடுத்து நீதியை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். “ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் ?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் ஊடான விமான சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக…

தொடரும் பதற்றம்: நால்வர் கைது…. !விடுதலை செய்யக்கோரி சட்டத்தரணிகள் கடும் வாக்குவாதம்

காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்தோடு தடுப்பு கம்பிகளுக்கு முன்பாக…

பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு கோட்டைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்தை மேற்கொண்டுள்ளனர். காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு !

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலம் பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. CCTV கமராக்கள் பொருத்தப்பட்டும் அவை செயலிழந்துள்ள வீடொன்றில் இருந்து…

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய புகைப்படங்கள் !

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம்…

5 நாட்களாகியும் தொலைபேசியை கைப்பற்றாத சி.ஐ.டி.: சாட்சியத்தை அழிக்க ஏற்பாடு?

உத்தரவு வழங்கி 5 நாட்கள் கடந்தும் தேசபந்து தென்னகோனின் தொலைபேசியை இதுவரை சி.ஐ.டியினர் கைப்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொலைபேசியைக் கைப்பற்றி பகுப்பாய்வை மேற்கொள்ள சட்டமா அதிபர் 23 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவரிடம் இருந்து…

வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலம் கண்டறிவு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் 76 மற்றும் 73 வயதுடையவர்களின் சடலங்கள் கண்டறிய பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார்.…

நெருக்கடி காரணமாக சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பெருமளவிலான நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் அறிவித்துள்ளது.