Month: April 2022

கோரிக்கைக்கு எதிராக அரச தலைவர்கள் செயற்பட்டால் அது சாபமாக மாறும் – ஓமல்பே சோபித தேரர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும் சாபமாக மாறும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். ஆயிரம் பௌத்த தேரர்களின்…

ஜனாதிபதி கோட்டா பதவி விலக்கும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கு நோ…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்களிப்பை வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று மாலை யக்கலவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிலையில் அங்கு கருத்து…

சென்னை அணியின் தலைவராக மீண்டும் டோனி

சென்னை அணியின் தலைவராக டோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்கு ஜடேஜா அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட போதும் ஆனால் அணி எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.…

சூதாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – சஜித் பிரேமதாச

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். எனவே எதிர்வரும்…

தாய்லாந்தில் இருந்து எரிவாயு கொள்வனவு: ஓமானைவிட 10 டொலர் இலாபம் என்கின்றது லிட்ரோ நிறுவனம்

தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 95 டொலர் என தாய்லாந்தில் இருந்து வருடத்திற்கு 300,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை வாங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.…

புதிய அரசாங்கம் அவசியம் என முன்னாள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்து

பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கும் புதிய அரசாங்கம் அவசியம் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்ததாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.…

பெண்களை காதலிப்பது போன்று நடித்து அச்சுறுத்தல் – இறுதி எச்சரிக்கை விடுத்து ஆவா குழு என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் தண்டிக்கப்பட வேண்டிய சில தவறுகள் தமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம்…

“மக்கள் தீர்வுகளையே விரும்புகின்றனர், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அல்ல” – ஐ.தே.க.

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும் என்று மாத்திரமே பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும்…

இடைக்கால அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் இருக்க கூடாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கடந்த காலங்களில் மோசடி அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களுடன் எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் அதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து…

இடைக்கால அரசாங்கத்தில் இணையக்கோரி மிரட்டல் அழைப்புகள் – சஜித் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணையக்கோரி 24 மணி நேரமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் கூறியுள்ளார்.…

இரசாயன உரத் தடைக்கு நஷ்ட ஈடு கோரி உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

இரசாயன உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கும் ஜனாதிபதியின் முடிவின் மூலம் நாட்டில் விவசாயிகளுக்கும் விவசாயத் துறைக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அமைச்சர் ரமேஷ்…

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அழைப்பு

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் பங்காற்றலுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இன்று (29) தம்மைச் சந்தித்த சுயஈன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலிருந்து 5 பேரை இடைக்கால அரசாங்கத்தில் நியமிக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்…

எதிர்வரும் 1 மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை

எதிர்வரும் முதலாம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மறு தினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் முடிவு…

மஹிந்த இல்லாத புதிய அமைச்சரவைக்கு ஜனாதிபதி இணக்கம் – மைத்திரி

அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு இல்லாமலேயே புதிய பிரதமருடன் அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன…

பிரதமருக்கு 117 பேர் ஆதரவு உறுதியானது: அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டது

ஜனாதிபதி மாளிகையில் இன்று (29) முற்பகல் நடைபெறவிருந்த அனைத்து கட்சிகளுடனான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் சுயாதீனமாக செயற்பட்ட குழுவுடன் மாத்திரம் ஜனாதிபதி இன்று கூடி கலந்துரையாடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு…

போராட்டக்காரர் மீது பொலிஸார் தாக்குதல் : அலரிமாளிகைக்கு வெளியே பதற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகின்றது. நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகையை வைக்க முயற்சித்த போது குறித்த நபர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட அரங்கத்தை பதவி விலகுமாறு கோரிக்கை…

க.பொ.த. O/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி சாதாரணதர பரீட்சை மே 23 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும்…

இடைக்கால அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் பதவி விலகுகின்றார் மஹிந்த – நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

இடைக்கால அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் பதவி விலகலாம் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நேற்று (28) தெரிவித்தார். 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய…

IMF உடன் இரு மாதங்களில் ஆரம்ப உடன்படிக்கை – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையானது இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட அல்லது ஆரம்ப உடன்படிக்கையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றியபோது மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர்,…

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு !

இன்று (29) முதல் நாளை 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு…

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்

இந்திய திரை உலகின் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சலீம் கவுஸ் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். ஆரம்பக் கட்டத்தில் ஹிந்தியில் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த சலீம் கவுஸ், தொடர்ந்து தி…

இந்தோனேஷியா வழங்கிய 550 மில்லியன் பெறுமதியான மருத்துவ உதவி!!

இந்தோனேஷியாவினால் இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக குறித்த பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து…

ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம்: அனைத்து பொலிஸாரையும் கைது செய்ய சிஐடி பிரதானிக்கு உத்தரவு!

ரம்புக்கனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு பொலிஸ்…

நிலைமை மேலும் மோசமாகும் – முன்னாள் பிரதமர் எச்சரிக்கை

கடன் நெருக்கடிக்கு கடுமையான தீர்வை எட்ட முடியாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர், தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரே…

சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்கள் தனித்தனியாக ஜனாதிபதியை சந்திக்க திட்டம்!

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதை அறிவித்த 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை தனித்தனியாக சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த சந்திப்பு ஜனாதிபதி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது…

நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு செல்வதா? இல்லையா? – இன்று முடிவு

அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்ட 11 பேர் கொண்ட கட்சிகளின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மைத்திரிபால சிறிசேன மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். தற்போதைய…

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று!!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து கலந்துரையாட சபாநாயகரால் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள…

ரம்புக்கனை விவகாரம்: நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்கின்றது பொலிஸ்

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இன்னும் பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.