நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னர் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் என பரவலாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர்கள் எவரும் இல்லாத நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் புதிய அமைச்சரவையில் 20 பேர் மட்டுமே இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக நிறுவனங்களை கொண்டுள்ள அமைச்சிற்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் யார்யாருக்கு அமைச்சரவை பதவிகளை வழங்குவது என்ற முடிவுக்குவருவதற்கு சுமார் இரண்டு வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் மே 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இதன்போது எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.