யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன் 92 பெட்ரோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இக்கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் விநியோகிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒக்டேன் 95 பெட்ரோல் விநியோகிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரேநாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap