இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாயை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில் இது இடம்பெற்றுள்ளது.
கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது.
அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
2022 இல் இதுவரை 572 பில்லியன் ரூபாயை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 1.2 டிரில்லியன் ரூபாய் அச்சிடப்பட்ட அதேவேளை 2020 ல் 650 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.