இந்தியாவைனால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை பொருட்கள் என்பன எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையவுள்ளன.

மேலும் இந்தோனேஷிய அரசாங்கத்தின் 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்கொடையும் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்களிடம் இருந்து 340 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த மருந்துப் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெரம் என்றும் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 186 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 19.02 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக 148 அத்தியாவசிய மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap