புதிய அமைச்சர்கள் 10 பேர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் திட்டமிட்டுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதியாக புதிய அமைச்சர்கள் இருப்பார்கள் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஆறாவது தடவையாகவும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து, நான்கு புதிய அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.