விலையை அதிகரிக்கத் தவறினால் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகவே விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டர் தற்போது நஷ்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் லிட்ரோ நிறுவனம் தற்போது பல்வேறு வங்கிகளுக்கு 10 பில்லியன் ரூபாய் கடனை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2,500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும், அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என தெரிவித்து அரசாங்கம் விலை அதிகரிப்பை இரத்து செய்தது.
இதனை அடுத்து பழைய விலைக்கே 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது.