தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை சட்டரீதியாக நீக்குவதற்கான முன்னேற்பாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிஸில் விடுதலைப் புலிகள் ஒரு விடுதலையமைப்பே என நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக பிரித்தானியாவிலும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் அது பற்றிய பிரச்சார பணிகள் நேற்று Caterham high school. Ilford IG5 0QW பகுதியில் இடம்பெற்றது.

இதேவேளை குறித்த பிரசார நடவடிக்கைகள் இனிவரும் நாட்களிலும் குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்த 2009ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர், அந்த இயக்கத்தால் ஆபத்து ஏற்படும் என சொல்ல முடியாது. அதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் சமர்ப்பிக்க முடியவில்லை.

எனவே புலிகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது என ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap