வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் 76 மற்றும் 73 வயதுடையவர்களின் சடலங்கள் கண்டறிய பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap