இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 2,185 ரூபாயினால் அதிகரித்துள்ள நிலையில் புதிய விலை 4,860 ரூபாயாகும்.
இதேவேளை 5 கிலோ சிலிண்டர் 874 ரூபாயினால் அதிகரித்துள்ள நிலையில் அதன் புதிய விலை 1,945 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2.3 கிலோ சிலிண்டர் ஒன்றின் விலை 404 ரூபாயினால் அதிகரித்துள்ள நிலையில் அதன் புதிய விலை ரூ. 910 ஆகும்.