ரம்புக்கனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர், கைது செய்யும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நீதி வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக கேகாலை நீதவான் வாசன நவரத்ன நீதிமன்றில் அறிவித்தார்.

அத்திவாசியா மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு எதிராக பிரதேசவாசிகள் கடந்த 19 ஆம் திகதி காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டபோதும் கூட்டத்தை கலைக்காததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரை 20 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap