ரம்புக்கனையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இந்த சம்பவம் தொடர்பான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.