ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
போராட்டத்தின் போதான மோதலில் ஒருவர் உயிரிழந்ததோடு பொலிஸார் உட்பட 32 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணை நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 20 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.