கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வெற்றியின் மூலம் சமந்தா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சமந்தாவின் கதீஜா என்கிற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது சமந்தா அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தமக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி கூறும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமந்தா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவர் எவ்வளவு உற்சாகமாக இருந்தார் என்பதை பார்க்கவும், கேட்கவும் முடிகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “காத்துவாகுல ரெண்டு காதல் படத்துக்கு அமோக வரவேற்பு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி மக்களே. உங்களது வரவேற்பை நான் நேரில் இருந்து ரசித்து பார்க்க ஆசைப்படுகிறேன்.

நீங்கள் அனைவரும் படத்தை ரசியுங்கள். உங்கள் மெசேஜ், லெட்டர்கள் மற்றும் ட்வீட்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap