முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு நீதியை வழங்கி ராஜபக்ஷ அரசாங்கம் தர்மத்தின் வழியில் அரசியலை நடத்தி இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகாவம்ச சிந்தனையில் ஊறித் திளைத்து இருப்பதனாலேயே ராஜபக்ஷ குடும்பமும் சிங்கள மக்களும் இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே நாடு சீரழிகின்றது என்றும் உண்மையை உணர்ந்து சரியான வழியில் நடந்துகொண்டால் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதை இந்த நாட்டில் ஆட்சி செய்யும் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap