நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளது என்றால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டங்கள் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவேற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிப்பதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயக ரீதியான இப்போராட்டத்தில் தமிழர்களுக்கும் யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டது என்பதனை சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றமையமானது நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் புரையோடிப்போயுள்ள யுத்த வலிகளை நினைவுகூர்ந்து இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap