ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் குறித்து முன்னதாகவே அறிவித்திருந்தால் ரஞ்சித் சியம்பலபிட்டியவை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமித்திருக்க மாட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலபிட்டிய அந்த பதவியை வகிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

சஜித் பிரேமதாச உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், குறைந்தபட்சம் ஜே.வி.பியின் மூன்று எம்.பி.க்களின் ஆதரவையாவது பெற்றிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தனக்குத் தெரியாது இருப்பினும் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரிடம் இல்லை என்றும் அவர் கூறினார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap