மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு தொகுதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றம் சுமத்துவது தார்மீக அரசியல் செயல் அல்ல என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர டி சில்வா அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய வங்கி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையும், தடயவியல் கணக்காய்வு தொடர்பான ஆணைக்குழுவையும் நியமித்து முன்னாள் ஜனாதிபதி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.