சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்க கடற்படை மேற்கொண்ட முயற்சி இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/ 170 கிராம அலுவலர் பிரிவில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த காணியை நில அளவீட்டை மேற்கொள்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் வருகைதந்திருந்தனர்.
இதன்போது, காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எதிர்ப்பினை அடுத்து குறித்த காணியினை அளவீடு செய்ய முடியாது திரும்பிச் சென்றனர்.