பிரபாஸ் நடிக்கும் அடுத்தப்படத்துக்கு இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடப்படுகிறது. அண்மையில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ராதேஷ்யாம் படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்த படமான ’புராஜெக்ட் கே’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கான ஹீரோயின் தேர்வு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் ஹீரோயினுடன் நடித்த பிரபாஸ், அடுத்ததாகவும் விஜய் ஹீரோயினையே குறி வைத்துள்ளார்.
அதாவது, விஜய் தற்போது இயக்குநர் வம்சிபைடிபல்லி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் புஷ்பா பட புகழ் ‘ராஷ்மிகா மந்தனா’ நடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குவியத் தொடங்கவே, விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
இந்த வாய்ப்பு குறித்து ராஷ்மிகா மந்தனாவே பூரிப்புடன் பேசியிருந்தார். இந்நிலையில் இவரிடம் தான் ஸ்பிரிட் படக்குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே கொடுத்த கமிட்மெண்டுகள் இருப்பதால், இந்தப் படத்துக்கான சூட்டிங் உள்ளிட்ட தகவல்களை படக்குழுவிடம் ராஷ்மிகா கேட்டுள்ளார்.
இதில் தேதி பிரச்சனை இல்லை என்றால் பிரபாஸூடன் இணைந்து நடிக்க ஓகே சொல்லும் முடிவில் இருக்கிறாராம். அதேநேரத்தில் ராஷ்மிகா இல்லையென்றால், அடுத்த ஹீரோயினாக கியாரா அத்வானியை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது.
கியராரா அத்வானி தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்திருக்கும் ‘ஆர்சி 15’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இருவரில் யாரேனும் ஒருவர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் ஜோடியாக உள்ளனர். புராஜெக்ட் கே திரைப்படத்துக்குப் பிறகே ஸ்பிரிட் படத்தின் சூட்டிங் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.