எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய உதய கம்மன்பில, பிரதமருக்கு ஆதரவாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் 46 பேர் மட்டுமே கையொப்பமிட்டுள்ளதாக கூறினார்.

ஆகவே மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு இடமளிக்காமல் தமது பதவிகளை பாதுகாக்கும் வகையில் சிலர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் பதவி விலகாவிட்டால் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap