ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா அமைச்சரவைப் பேச்சாளராக இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இணை அமைச்சரவை பேச்சாளர்களாக கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடந்த சனிக்கிழமை நாலக கொடஹேவா ஆதரவு வழங்கியிருந்தார்.