அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
11 சுயாதீன அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக புதிய பிரதமரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைகியுள்ளது என கூறினார்.
முன்மொழிவுகள் குறித்து மற்ற கட்சிகளுடன் விவாதிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி வலியறுத்திய நிலையில் பொதுஜன பெரமுனவுடன் குறித்த குழு பேசியதாக கூறினார்.
அதன்படி பொதுஜன பெரமுன முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய கட்சிகளுடன் பேச்சு இடம்பெறுவதாகவும் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.