பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பிக்கு ஒன்றியம் ஆகியன இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அரசாங்கம் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று தலைநகரில் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் சுற்றி பொலிஸாரினால் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதி ஊடான போக்குவரத்தும் முற்றாக தடைபட்டுள்ளது.

கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட இடங்களிலேயே வீதிகளை முழுமையாக மறைத்து இவ்வாறு கம்பி வே​லிகள் அமைக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் நேற்று கொழும்பு மேலதிக நீதவனால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap