தொலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவம் இன்று காலை இளவாலையில் இடம்பெற்றுள்ளது.

வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ள நிலையில் இன்று காலை அறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய ஹெட்செட் மற்றும் பொக்கெட்டில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடக்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை வீடியோ கேம் விளையாடிய பல இளைஞர்கள் இந்தியாவில் உயிர் மாய்த்த சம்பவங்கள் அண்மையில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap