ஜனாதிபதி தன்னை பதவி விலகுமாறு ஒருபோதும் கூறவுமில்லை இனியும் கூறப்போவதுமில்லை என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதன் மூலமோ அல்லது தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமோ அரசாங்கம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என பிரதமர் கூறினார்.

பிரதேச சபைத் தலைவர்கள், நகர முதல்வர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டாம் என ஏகமனதாக கோரிக்கை விடுத்தனர்.

இலங்கைக்கு சீனாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் தனது சீனப் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள ஏனைய நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் நிலவும் நிலைமையை முன்னிலைப்படுத்திய கலந்துரையாடலின் போது சர்வதேச நாணய நிதியமும் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் தான் கலந்துரையாடியதாக பிரதமர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் சில கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

இந்நிலையில் நாட்டைமீளக் கட்டியெழுப்ப, ​​அத்தகைய கோரிக்கைகளை நாடு பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்ததன் பின்னர் உருவாக்கக்கூடிய சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக கலந்துரையாட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்த்க்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap