இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து, 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அதன்படி விளையாடிய 13 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று பெங்களுர் அணி 4 ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.

இதேவேளை விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap