கடன் நெருக்கடிக்கு கடுமையான தீர்வை எட்ட முடியாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர், தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒரே ஒரு உத்தி மட்டுமே உள்ளது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்கள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2020/2021 காலப்பகுதியில் இலங்கை மின்சார சபை 79 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது என்றும் இந்த வருடத்தில் 100 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என அமைச்சர் கணித்துள்ளதாக முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தச் சுமைகளை பொதுமக்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார்.