நாளை 28 முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்கக்கோரி தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில்இதற்கு ஆதரவினை தெரிவித்து அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை நாளைய போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து, தொழிலில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிகை விடுத்துள்ளது.
அத்துடன் நாளை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான பழனி திகாம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.