அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் முடிவு எட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இராசமாணிக்கம் சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.