அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர், முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் நிலைப்பாடு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையின் அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் கைமாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பிரதமருக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரக்கூடாது என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap