அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 20 திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்கினாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றியின் பின்னர் என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரியும் வரை நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.