மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.
எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து பொலிஸார் அவரை மீட்டு பாதுகாப்பாக, அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர்.