barricades had been removed by evening and the IUSF protest march had reached the Occupy Galle Face Protest

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டம் இன்று (24) 16வது நாளாகவும் தொடர்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக இன்று காலை, காலி முகத்திடல் பகுதிக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் இரும்பு வேலிகளினால் அடைக்கப்பட்டது.

மாணவர்களின் போராட்டம் கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை நோக்கி சென்றதை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இன்று மாலைக்குள் இந்த தடைகள் அகற்றப்பட்ட நிலையில் மாணவர்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களை சென்றடைந்தது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap