இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ தனக்கு விருப்பமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் வரை அந்த முடிவை ஏற்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இனம், மத பேதமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் மக்கள், ஜனாதிபதியும் பிரதமரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் திருடர்களுடன் இணைந்து செயற்பட தனக்கு விருப்பமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.