ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது தயாரித்து வருகின்றார்.

குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதியின் மீது நாடாளுமன்றுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்ட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சி அதில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

அவ்வாறு ஆதரவு வழங்கினால் பிரதமர் பதவி பொதுஜன பெரமுன தக்க வைத்துக் கொள்ளும் அல்லது 20வது திருத்தத்திற்கு வாக்களித்தவர்களும் பிரதமராக வருவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளது.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களை திரட்டி வருகின்றது.

இந்நிலையில் இதற்கு 120 உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என தற்போதைய அரசாங்கத்தின் மீது திடீர் என குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap