ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு அனைத்து தமிழ் தலைமைகளும் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.