சோமாலியாவின் தலைநகரில் உள்ள கடலோர உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் சோமாலிய பொலிஸ் ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகின்ற அதேவேளை காயமடைந்தவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை.
பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் அதிகம்வரும் குறித்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அல்-ஷபாப் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அறத்தொடு துரோக அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை தாம் குறைவைத்துள்ளதாகவும் குறித்த தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாக அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப், அமைப்பு சோமாலிய தலைநகரில் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த மார்ச் 24 அன்று மத்திய சோமாலிய பெலெட்வேய்ன் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.