ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சேரவேண்டிய இடத்தை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப் படையின் விமானத்தில் நாட்டை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைத்தீவை அடைந்துள்ளார்.

அங்கிருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேறு நாட்டுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் அவர் செல்லும் நாடு தொடர்பாக உறுதியாக தெரியவில்லை.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap