செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று நோவக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற போட்டியில் கரேன் கச்சனோவ் மற்றும் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 4-6 என முதல் செட்டை இழந்த நோவக் ஜோகோவிச், அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-2 என கைப்பற்றி இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் அண்ட்ரே ரூப்லெவ்லும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச், இதற்கு முன்பு 2009 மற்றும் 2011-ம் ஆண்டு செர்பியா ஓபன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap