இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கைக்வாட் 99 ஓட்டங்களையும் டெவோன் கொன்வே ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து 203 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்களை இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சன்ரைஸஸ் அணி சார்பக நிக்கோலஸ் பூரண் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap