நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதை அறிவித்த 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை தனித்தனியாக சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்கும் நோக்கில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் இராஜினாமா செய்யும் வரை, ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.