மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தலைமை தாங்கிய கீரன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சகலதுறை வீரரான பொல்லார்ட் 123 ஒரு நாள் போட்டிகளில் 2,706 ஓட்டங்கள் மற்றும் 55 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதே நேரத்தில் 101 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் 1,569 ஓட்டங்கள் மற்றும் 42 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
34 வயதான கீரன் பொல்லார்ட் 2019 ஆம் ஆண்டில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியில் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் மொத்தம் 63 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளை வழிநடத்தியது தனது வாழ்க்கையின் “உயர்ந்த கவுரவம்” என பொல்லார்ட் கூறினார்.