புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது, ​​அடுத்த ஜனாதிபதியாக ஆளும்கட்சி சார்பாக போட்டியிடப் போவதாக டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

தாம் முப்பது வருடங்களாக அரசியலில் இருப்பதாகவும், எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்படுவதாகவும் தெரிவித்து குறித்த வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தான் ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பதில் ஜனாதிபதிக்கே தமது ஆதரவு என ஆளும்கட்சி அறிவித்துள்ள போதும் ரணில் விக்ரமசிங்க இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap