பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகா சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு புறம்பாக அரச தலைவர்கள் செயற்பட்டால் இதுவரை காலமும் வழங்கிய ஆசிர்வாதம் அனைத்தும் சாபமாக மாறும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

ஆயிரம் பௌத்த தேரர்களின் பங்குப்பற்றலுடன் இன்று (30) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சங்கமகா பிரகடனத்திற்கான மகா சம்மேளனத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஓமல்பே சோபித தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும். நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்கி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த யோசனைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி இன்று மகா சங்கத்தினர் பிரகடனம் ஒன்றை வௌியிட்டனர்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையில்லாததால், நாட்டை மீட்டெடுத்து மக்களின் எதிர்ப்பை தணியச் செய்து, வீழ்ச்சியடைந்த மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என மகா சங்கத்தினரின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap