காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் அமைதியான போராட்டம் இன்று 15ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்ற நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று சனிக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பல நாட்களாக காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடுமையான அசௌகரியம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக தெரிவித்து 16 ஏற்பாட்டாளர்களின் பெயர்களை கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

போராட்டங்களில் மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும், ஆகவே போராட்டத்தை ஏற்பாடு செய்த 16 நபர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்குமாறும் கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அந்த மாதிரியான அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கொழும்பு மேலதிக நீதவான் குறிப்பிட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap