யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டு சந்தை தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து இன்றைய அதிகம் அதிகாலை முதல் பெட்ரோலுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிமான நீண்ட வரிசையில் மக்கள் வாகனங்களுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் காலை 10.45 மணியளவிலையே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் தாங்கி வந்திருந்தது.

அதனை க.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு வழங்குமாறு தமக்கு அறிவுறுத்தல் கிடைத்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் குழப்பம் அடைந்த நிலையில் அங்கு மேலதிகபொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கல்வியங்காட்டு சந்தை தொகுதியுடன் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap